முகப்பு
செய்திகள்

டிசம்பரில் சாய்னா நெவாலுக்குக் காதல் திருமணம்? பாட்மிண்டன் வட்டாரத்தில் பரபரப்பு! (படங்கள்)

28 வயது சாய்னா, 32 வயது காஷ்யப் ஆகிய இருவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரர்கள்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், சக வீரரான காஷ்யப்பை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 வயது சாய்னா, 32 வயது காஷ்யப் ஆகிய இருவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரர்கள். கடந்த 8 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. 2005-ல் கோபிசந்திடம் இருவரும் பயிற்சி பெற ஆரம்பித்தபோது முதல்முதலாகச் சந்தித்துக்கொண்டார்கள். 2012 ஒலிம்பிக் போட்டியில் நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். 

இருவருக்கும் டிசம்பர் 16 அன்று திருமணம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகிறது. அந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளார்கள். டிசம்பர் 21 அன்று திருமணம் வரவேற்பு நடைபெறவுள்ளது. இந்தத் திருமணச் செய்தி குறித்து சாய்னா நெவால், காஷ்யப் ஆகிய இருவரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.  

Advertisement

பிரபல வீராங்கனையான சாய்னா நெவால் 20 போட்டிகளை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். காஷ்யப், 2014 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments