செய்திகள்

உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்: கிருஷ் ஸ்ரீகாந்த் விருப்பம்!

நான் கேப்டனாகவோ தேர்வுக்குழுத் தலைவராகவோ இருந்தால் மேட்ச் வின்னரைத் தான் தேர்வு செய்வேன்...

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 1983 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றது தொடர்பான ஒரு பாராட்டு விழாவில் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய முன்னாள் வீரர் கிருஷ் ஸ்ரீகாந்த், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வில் 4-ம் நிலை வீரருக்கான இடம்தான் குழப்புகிறது. நான் கேப்டனாகவோ தேர்வுக்குழுத் தலைவராகவோ இருந்தால் மேட்ச் வின்னரைத் தான் தேர்வு செய்வேன். இங்கிலாந்தில் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத ஒரு டெஸ்டில் வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார் ரிஷப் பந்த். அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என்னுடைய கிரிக்கெட் காலத்தில் கபில் தேவ் அப்படியொரு நம்பிக்கையை எனக்கு அளித்தார். அதேபோல ரிஷப் பந்துக்கும் சுதந்தரம் அளிக்கப்படவேண்டும். அவரால் குறைந்தபட்சம் 3 ஆட்டங்களிலாவது வெற்றியை அளிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT