செய்திகள்

உலகக் கோப்பை போட்டிக்கு ரிஷப் பந்த், ராயுடுவைத் தேர்வு செய்யாதது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்!

ரிஷப் பந்த், ராயுடு ஆகியோரைத் தேர்வு செய்யாதது ஏன் என்கிற கேள்விக்குத் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் பதிலளித்ததாவது...

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ.

ரிஷப் பந்த், ராயுடு ஆகியோரைத் தேர்வு செய்யாதது ஏன் என்கிற கேள்விக்குத் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் பதிலளித்ததாவது:

தினேஷ் கார்த்திக்கின் விக்கெட் கீப்பிங் திறமையும் அவரைத் தேர்வு செய்ததற்குக் காரணம். தோனிக்கு மாற்று வீரராகவே தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.     மேலும் சில சர்வதேச ஆட்டங்களில் கடைசிக்கட்டங்களில் அவர் அதிரடியாக விளையாடியதைப் பார்த்தோம். அதனால் தான் தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்துள்ளோம்.

சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு 4-ம் நிலை வீரருக்குப் பல வீரர்களைத் தேர்வு செய்தோம். தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே. ராயுடுக்கு நிறைய வாய்ப்புகள் அளித்தோம். ஆனால் விஜய் சங்கர் மூன்று வகை திறமைகள் கொண்டவராக உள்ளார். அவரால் பேட்டிங் செய்யமுடியும். நல்ல சூழல் அமைந்தால் அவரால் சில ஓவர்கள் வீசமுடியும். மேலும் அவர் நல்ல ஃபீல்டரும்கூட. விஜய் சங்கரை 4-ம் நிலை வீரராகப் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT