செய்திகள்

உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட வங்கதேச அணியில் புதிய வீரர் ஒருவருக்கும் வாய்ப்பு!

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் புதிய வீரரும் வேகப்பந்துவீச்சாளருமான அபு ஜயத் தேர்வாகியுள்ளார். கடைசியாக செப்டம்பர் 2018-ல் விளையாடிய மொசாடக் ஹுசைனும் அணியில் இடம்பிடித்துள்ளார். எனினும் டஸ்கின் அஹமது, இம்ருல் கெய்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

வங்கதேச அணி: மஷ்ரஃப் மொர்டஸா (கேப்டன்), லிடன் தாஸ், முஹமது மிதுன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால், செளம்யா சர்கார், முஹமது சைஃபுதின், அபு ஜயத், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான், ருபெல் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், சபிர் ரஹ்மான், மொசாடக் ஹுசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT