செய்திகள்

ஆசிய தடகள போட்டி: டுட்டி சந்த் புதிய சாதனை

DIN

ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் மகளிர் 100 மீ ஓட்டத்தில் இந்திய நட்சத்திரம் டுட்டி சந்த் புதிய தேசிய சாதனை படைத்தார்.
கத்தார் நாட்டின் டோஹாவில் ஆசிய தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற பந்தயங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
100 மீ. ஹீட்ஸ் பிரிவில் டுட்டி சந்த் 11.28 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார். மேலும் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார்.  தனது முந்தைய சாதனையான 11.29 விநாடிகளை அவர் முறியடித்தார்.
மேலும் ஜின்சன் ஜான்ஸன் 800 மீ, முகமது அனாஸ், ஆரோக்கியராஜிவ் 400 மீ, பிரவீன் சித்திரைவேல் மும்முறை தாண்டுதல், கோமதி மாரிமுத்து மகளிர் 1500 மீ. ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
ஹிமாதாஸ் காயம்: இந்திய இளம் நட்சத்திரமான ஹிமா தாஸ், தசைபிடிப்பு பாதிப்பு காரணமாக 400 மீ. ஹீட்ஸ் பிரிவில் பங்கேற்கவில்லை. எம்.ஆர். பூவம்மா இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT