முகப்பு
செய்திகள்

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம்: நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம் செய்தது தொடர்பாக பிரபல நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On : 22 ஏப்ரல், 2019 at 12:26 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:13 PM

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம் செய்தது தொடர்பாக பிரபல நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியின் போது மைதானத்தில் அட்டகாசம் செய்து, தன்னை ஆட்டத்தை பார்க்க விடமால் செய்ததாக ஹைதராபாத் போலீஸில் ஒருவர் புகார் அளித்தார். மேலும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி உள்ளிட்ட 6 பேர் மீது 341, 188 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.