செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியது: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்!

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில்...

எழில்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் போட்டி, பிர்மிங்காமில் இன்று தொடங்கியுள்ளது. இதன்மூலம் அனைவரும் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும் ஆஷஸ் தொடர் மூலமாக அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், ஹேஸில்வுட் இடம்பெறவில்லை. எனினும் சிடிலுக்கு இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. 27 தொடர்களில் மொத்தம் 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இ. தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட 9 அணிகள் ஆடுகின்றன. இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் வரும் 2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT