செய்திகள்

 தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: வரலாறு படைத்தனர் சத்விக்-சிராக் 

DIN

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தனர் இந்தியாவின் சத்விக்-சிராக் ஷெட்டி.
 உலக பாட்மிண்டன் சங்கம் சார்பில் சூப்பர் 500 சீரிஸ் தாய்லாந்து ஓபன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் உள்ளிட்டோர் தோல்வியுற்று வெளியேறினர்.
 இந்நிலையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் ரங்கிரெட்டி-சிராக்ஷெட்டி இணை தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
 உலக சாம்பியனை வீழ்த்தினர்: இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனும், சீனாவைச் சேர்ந்த லி ஜுன் ஹிய்-லி யு சென் இணையை எதிர்கொண்டனர். முதல் கேமை 21-19 என போராடி வென்றனர். இரண்டாவது கேமில் சீன இணை ஆதிக்கம் செலுத்தி 18-21 என வென்றது. பின்னர் சுதாரித்துக் கொண்ட சத்விக்-சிராக் இணை மூன்றாவது கேமை 21-18 என வென்று முதன்முறையாக சூப்பர் சீரிஸ் இரட்டையர் பிரிவில் சாம்õயன் பட்டம் வென்று வரலாறு படைத்தனர். சீன இணை நடப்பு சாம்பியனாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பட்டம் வென்ற சத்விக்-சிராக் இணைக்கு பாராட்டு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT