செய்திகள்

டிஎன்பிஎல்: சேப்பாக் கில்லீஸ் வெற்றி

DIN

டுட்டி பேட்ரியட்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சேப்பாக்.
அதிகபட்சமாக கோபிநாத் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 53 ரன்களை விளாசினார். உத்திரசாமி சசிதேவ் 27 ரன்களை எடுத்தார்.
கங்கா ஸ்ரீதர் ராஜு 0, கெüஷிக்காந்தி 15, விஜய் சங்கர் 3, முருகன் அஸ்வின் 4, உமாசங்கர் 1, ஹரிஷ்குமார் 0, பெரியசாமி 2, அலெக்சாண்டர் 3 என சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
டுட்டி அணி தரப்பில் கார்த்திக் ஷண்முகம் 3}23, அதிசயராஜ் 2}29, பூபாலன் 2}23, தமிழ்க் குமரன் 2}27 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டுட்டி பேட்ரியட்ஸ் தோல்வி: 128 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டுட்டி அணியால், சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. 
18.5 ஓவர்களில் 95 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது டுட்டி பேட்ரியட்ஸ். அக்ஷய் சீனிவாசன் 6 பவுண்டரியுடன் அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

ஹரிஷ்குமார் அபாரம்:

சேப்பாக் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹரிஷ்குமார் 4 ரன்களை மட்டுமே தந்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். விஜய் சங்கர் 2}15, பெரியசாமி 2}21, சித்தார்த் 2}12 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
ரூபி திருச்சி வாரியர்ஸ் 121/7:  திருநெல்வேலியில் இரண்டாவதாக நடைபெற்ற விபி காஞ்சி வீரன்ஸ்}ரூபி திருச்சி வாரியர்ஸ் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 43, முகுந்த் 32 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 
காஞ்சி தரப்பில் ரங்கராஜ், ஆஷிக் சீனிவாஸ், பாபா அபரஜித், சஞ்சய் யாதவ் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT