முகப்பு
செய்திகள்

கோலி சதம், புவனேஸ்வர் 4 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி (விடியோ)

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. 

இரு அணிகளுக்கு இடையில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது.  முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 2-ஆவது ஒருநாள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 279 ரன்களைக் குவித்தது. கேப்டன் கோலி 120, ஷிரேயஸ் ஐயர் 71 ரன்களை விளாசினர்.

மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு மே.இ. தீவுகள் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் மே.இ. தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லூயிஸ் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் புவனேஸ்வர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆட்ட நாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.