செய்திகள்

தேசிய ஜூனியர் டென்னிஸ்: சால்ஸா, தேவ் வெற்றி

DIN

எம்சிசி-அடிடாஸ் 27-ஆவது தேசிய ஜூனியர் (18 வயதுககுட்பட்ட) களிமண் தரைப் போட்டியில் சால்ஸா அஹர், தேவ் ஜாவியா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சென்னை எம்சிசி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத்தின தேவ் ஜாவியா 6-2, 6-1 என தில்லியின் சிராக்கை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் மகாராஷ்டிராவின் சால்ஸா 6-0, 6-1 என தெலங்கானாவின் பவானி பாதக்கை வென்றார்.
ஆடவர் பிரிவில் அஜய் மாலிக், கபீர் ஹேன்ஸ், கிருஷ்ண் ஹூடா, அகிலேந்திரன் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். மகளிர் பிரிவில் வன்ஷிகா செளதரிவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT