செய்திகள்

மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு  பரிந்துரை 

பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனைகளை படைக்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் விளையாட்டுத் துறை சார்பாக மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் தயான்சந்த் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், கால்பந்துவீரர் பாய்சங் பூட்டியா உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்வுக்குழுவானது, பூனியாவின் பெயரை இறுதி செய்து விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் மற்ற விருதுகளுக்கு வீரராகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட உள்ளது.

தனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து தற்போது ஜார்ஜியாவில் பயிற்சி செய்து வரும் பஜ்ரங் பூனியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT