செய்திகள்

ஆர்ச்சர் அபாரத்தில் ஆஸி. சரண்டர்

Raghavendran

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 2-ஆவது டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சரின் அற்புதமான பந்துவீச்சில் ஆரம்பம் முதலே திணறியது. முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களில் சொற்ப ரன்களுடன் வெளியேறிய வார்னர், இப்போட்டியில் 94 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்தார்.

முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக இடம்பிடித்துள்ள மார்னஸ் லாம்பஷே மட்டும் அதிகபட்சமாக 129 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். 

அபாரமாக பந்துவீசிய ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பிராட் 2 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்குச் சுருண்டது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. 2-ஆவது போட்டி டிராவில் முடிந்தது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT