செய்திகள்

ரன் எடுக்காமலே பேட்டிங்கில் சாதனை புரிந்த மே.இ. தீவுகள் வீரர்: இப்படியும் சாதிக்கலாம்!

மேற்கிந்தியத் தீவுகளின் கம்மின்ஸ் 45 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வரலாற்றுச் சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

DIN


மேற்கிந்தியத் தீவுகளின் கம்மின்ஸ் 45 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வரலாற்றுச் சாதனையில் இடம்பிடித்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் 10-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிகுவெல் கம்மின்ஸ் ஜேசன் ஹோல்டருடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்தார். இவர் சாதுரியமாக ரன் குவிக்க முயலாமல் ஹோல்டருக்கு நல்ல ஒத்துழைப்புத் தந்தார். இதைப் பயன்படுத்திய ஹோல்டர் ஓரளவு ரன் சேர்த்தார். இதனால், 3-வது நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் இந்தியா விக்கெட் வீழ்த்த திணறியது. 

இதையடுத்து, ஹோல்டர் ஒருவழியாக 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, கம்மின்ஸும் அடுத்த ஓவரில் முதன்முறையாக ரன் எடுக்க முயன்று 45-வது பந்தில் ஜடேஜா ஓவரில் போல்டானார். இதனால், 45 பந்துகளை எதிர்கொண்ட அவரால் கடைசி வரை ரன் கணக்கைத் தொடங்க முடியவில்லை. 

இதன்மூலம், அவர் பிரத்யேகமான சாதனையைப் புரிந்துள்ளார். ரன் ஏதும் எடுக்காமலே களத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டவர்கள் வரிசையில் இவர் தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

1999-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், நியூஸிலாந்து வீரர் ஜியோஃப் அல்லாட் 101 நிமிடங்கள் களத்தில் இருந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்போது கம்மின்ஸ் இவருக்கு அடுத்தபடியாக 95 நிமிடங்கள் களத்தில் இருந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT