செய்திகள்

அதிவேக 50 விக்கெட்டுகள்: பும்ரா புதிய சாதனை!

அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையை வெள்ளிக்கிழமை படைத்தார். 

Raghavendran

உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா (25), அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையை வெள்ளிக்கிழமை படைத்தார். மே.இ.தீவுகள் உடனான டெஸ்ட் போட்டியின் போது பும்ரா இந்த புதிய சாதனையைப் படைத்தார்.

வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 13 டெஸ்ட்களில் இச்சாதனையை படைத்திருந்தனர். ஆனால், பும்ரா 11 டெஸ்ட்களில் இந்த மைல்கல்லை எட்டினார். மேலும் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நரேந்திர ஹிர்வானி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருடன் 3-ஆம் இடத்தை பகிர்ந்துகொண்டார். 

அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 9 டெஸ்ட்களுடன் அஸ்வின் முதலிடத்திலும், 10 டெஸ்ட் போட்டிகளுடன் அனில் கும்ப்ளே 2-ஆம் இடத்திலும் உள்ளனர்.

இருப்பினும், பந்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் இதில் அஸ்வின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். 50 விக்கெட்டுகளை வீழ்த்த அஸ்வினுக்கு 2,597 பந்துகள் தேவைப்பட்ட நிலையில், பும்ராவுக்கு 2,465 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

SCROLL FOR NEXT