செய்திகள்

கிருஷ்ணப்ப கெளதம் புதிய டி20 சாதனை 

DIN

கர்நாடக ப்ரீமியர் லீக் போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணி வீரர் கிருஷ்ணப்ப கெளதம் புதிய டி20 சாதனை படைத்தார். 56 பந்துகளில் 134 ரன்களை விளாசிய அவர், பந்துவீச்சில் 8/15 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
 பெங்களூருவில் சனிக்கிழமை பெல்லாரி டஸ்கர்ஸ்-ஷிவமொக்கா லயன்ஸ் இடையிலான கேபிஎல் டி20 ஆட்டம் நடைபெற்றது.
 முதலில் ஆடிய பெல்லாரி அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஷிவமொக்கா அணி 16.3 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
 கிருஷ்ணப்ப கெளதம் புதிய சாதனை: பெல்லாரி ஆல்ரவுண்டரான கெளதம் 56 பந்துகளில் 134 ரன்களை விளாசினார். 39 பந்துகளில் அவர் சதம் அடித்த சாதனையும் தன் வசம் வைத்துள்ளார். 134 ரன்களே கேபிஎல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோராகும். பின்னர் பந்துவீசிய கெளதம் 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டு தந்து 8 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 மாநில லீக் போட்டிகளுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்து தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 எனது ஆட்டம் ஒரு கனவு போன்று அமைந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என கெளதம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT