செய்திகள்

துரந்து கோப்பை: கோகுலம் கேரளா எஃப்சி சாம்பியன்

DIN

துரந்து கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கோகுலம் கேரளா எஃப்சி அணி.
 ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான துரந்து கோப்பை 129-வது போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி ஆட்டம் சால்ட்லேக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. உள்ளூர் அணியான மோகன் பகான்-ஐ லீக் அணியான கோகுலம் கேரளாவை எதிர்கொண்டு ஆடியது.
 தொடக்கம் முதலே கேரளா அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதன் வீரர் மார்கஸ் ஜோசப் அற்புதமாக ஆடி 2 கோல்களை அடித்தார். மோகன் பகான் தரப்பில் ஜோசப் பெட்டியா ஆறுதல் கோலடித்தார். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரள அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 17-ஆவது முறையாக துரந்து கோப்பையை வெல்லும் மோகன் பகான் கனவு பொய்த்துப் போனது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT