செய்திகள்

பரபரப்பான கட்டத்தில் 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட்

Raghavendran

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ஹெட்டிங்லியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 27.5 ஓவர்களிலேயே வெறும் 67 ரன்களுக்குச் சுருண்டது. ஜோஷ் ஹேஸல்வுட் 5, பேட் கம்மின்ஸ் 3, பேட்டின்ஸன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 246 ரன்கள் எடுத்தது. அதிகபகட்சமாக மார்னஸ் லாம்பஷே 80 ரன்கள் எடுத்தார். ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர் மற்றும் பிராட் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்நிலையில், 359 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட், ஜோ டென்லி ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. 

155 பந்துகளை சந்தித்த ஜோ டென்லி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 75 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்துக்கு 203 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு 8 விக்கெட்டுகளும் தேவைப்படுவதால், இப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. மேலும் இந்த டெஸ்டில் வெற்றிபெற்றால் ஆஷஸ் கோப்பையை தக்க வைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT