செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார் பி.வி.சிந்து

தங்கப்பதக்கத்துடன் நாட்டுக்கு பெருமையும் சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Raghavendran

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹாரவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.

உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு புதுதில்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆசிபெற்றார் உலக பாட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து. தங்கப்பதக்கத்துடன் நாட்டுக்கு பெருமையும் சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் போது பி.வி.சிந்துவின் பயிற்சியாளரும் பாட்மிண்டன் வீரருமான கோபிசந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து. அவருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கி அமைச்சர் ரிஜிஜூ பாராட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT