செய்திகள்

துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் இளவேனில் | Elavenil Valarivan

எழில்

குஜராத்தில் வசிக்கும் 20 வயது தமிழ்ப் பெண்ணான இளவேனில் வாலறிவன், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 

10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று அவர் தங்கம் வென்றுள்ளார். கடந்த வருடம், சிட்னியில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இளவேனில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். இந்நிலையில் சீனியர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் முதல்முறையாகத் தங்கம் வெல்கிறார். 

இந்தப் போட்டியில் அபூர்வி சண்டேலா, அஞ்சலி பக்வத் ஆகியோருக்குப் பிறகு தங்கம் வெல்லும் 3-வது இந்திய வீராங்கனை, இளவேனில். கடலூரில் பிறந்த இவர், இரு வயதுக்குப் பிறகு அஹமதாபாத்தில் வசித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT