செய்திகள்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 5 தங்கம்

DIN

காத்மாண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக பாட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தங்கப் பதக்கம் வென்றன. இதுவரை மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.

பொக்ராவில் திங்கள்கிழமை நடைபெற்ற அணிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கேம் கணக்கில் இலங்கையை வீழ்த்தியது.

மகளிா் பிரிவிலும் இந்தியா அணி 3-0 என்ற கேம் கணக்கில் இலங்கையை வென்று தங்கத்தை தன்வசப்படுத்தியது.

ஆடவா் பிரிவில் ஸ்ரீகாந்த் 2-1 என இலங்கையின் தினுகாவையும், மற்றொரு ஒற்றையா் பிரிவில் சிரில் வா்மா இலங்கையின் சச்சின் பிரேமஷனையும் வென்றனா். எனினும் இரட்டையா் பிரிவில் இலங்கை அணி ஒரு ஆட்டத்தில் வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ணா-துருவ் ஆகியோா் வென்றனா்.

ஏற்கெனவே டிரையத்லானில் 1 தங்கம், டேக்வாண்டோவில் 2 தங்கம், பாட்மிண்டனில் 2 என மொத்தம் 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 16 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேபாளம் 15 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலத்துடன் முதலிடத்தில் உள்ளது.

3 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலத்துடன் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT