செய்திகள்

குச்சியாக மாறிய கைக்குட்டை: மைதானத்தில் மேஜிக் செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய தெ.ஆ. வீரர்! (விடியோ)

எழில்

திரைப்படங்களில் தான் இதுபோன்ற காட்சிகளை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் மேஜிக் ஒன்றை நிகழ்த்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி. 

பார்ல் ராக்ஸ் - டர்பன் ஹீட் அணிகளுக்கு இடையிலான தென் ஆப்பிரிக்க எம்.எஸ்.எல். டி20 போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காக விளையாடிய ஷம்சி, விஹாப் லுபேவின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு விக்கெட்டை வீழ்த்திய பிறகு அதை விதவிதமாகக் கொண்டாடும் பந்துவீச்சாளர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ஷம்சி வித்தியாசமான முறையில் கொண்டாடி அசத்தினார்.

விக்கெட் விழுந்தவுடன் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிகப்பு கைக்குட்டையை வெளியில் எடுத்தார் ஷம்சி. அது அடுத்தக் கணம், குச்சியாக மாறியது. அதை வைத்துக்கொண்டு 29 வயது ஷம்சி கொண்டாடியதைக் கண்ட ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். 

இதன் விடியோவை எம்எஸ்எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

ஷம்சி, தென் ஆப்பிரிக்காவுக்காக 2 டெஸ்டுகள், 17 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ஷம்சியின் கொண்டாட்டம் (17.48 முதல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்க கோடை உழவு செய்வது அவசியம்

SCROLL FOR NEXT