செய்திகள்

சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றவுள்ள பெண் நடுவர்!

எழில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லக்‌ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார். சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் ஒருவர் பணியாற்றவுள்ளது இதுவே முதல்முறை.

டிசம்பர் 8 அன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு அமீரகம் - அமெரிக்கா இடையிலான சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் லக்‌ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார். 

இது, லக்‌ஷ்மியின் இரண்டாவது சாதனையாகும். ஐசிசியின் சர்வதேச நடுவர் பட்டியலில் இடம்பிடித்த முதல் பெண் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார். 51 வயது லக்‌ஷ்மி, 2008-09-ல் உள்ளூர் மகளிர் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார். இதுவரை 3 மகளிர் ஒருநாள், 16 ஆடவர் டி20, 7 மகளிர் டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT