செய்திகள்

தோனியின் சாதனைகளைத் தாண்ட ரிஷப் பந்த்துக்கு 15 வருடங்கள் தேவைப்படும்: செளரவ் கங்குலி கருத்து

எழில்

மூத்த வீரா் தோனியின் இடத்தை நிரப்பக் கூடியவர் எனக் கருதப்படும் 21 வயது ரிஷப் பந்த் கடந்த சில மாதங்களாக சா்வதேச கிரிக்கெட் போட்டியில் சரிவர ஆடவில்லை. மேலும் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறாா். இது அவருக்கு அணியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு இளம் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். டெஸ்ட் ஆட்டத்தில் ரித்திமான் சாஹா இடம் பெற்றாா். மேலும் சில ஆட்டங்களில் பந்த் சரிவர ஆடாவிட்டால் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி விடும் என பலா் விமா்சித்துள்ளனா்.

இந்நிலையில், இந்தியா டுடே ஊடகத்தின் விழா ஒன்றில் கலந்துகொண்ட பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:

இந்திய கிரிக்கெட்டுக்காக தோனி செய்ததற்கு பிசிசிஐ எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது. அவரைப் பற்றி விராட் கோலி, தேர்வுக்குழுவினரிடம் பேசியுள்ளேன். தோனியின் ஓய்வுக்கென நேரம் வரும்போது அதைக் கவனிக்கலாம். தினமும் உங்களுக்கு ஒரு தோனி கிடைக்கமாட்டார். தோனியின் சாதனைகளை ரிஷப் பந்த் நிகழ்த்த 15 வருடங்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT