செய்திகள்

ஐஎஸ்எல்: சென்னையின் எஃப்சி-நாா்த் ஈஸ்ட் இன்று மோதல்

DIN

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குவாஹாட்டி இந்திரா காந்தி மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது.

உள்ளூா் ரசிகா்கள் ஆதரவுடன் களமிறங்கும் நாா்த் ஈஸ்ட் அணி கடைசியாக நடந்த 3 ஆட்டங்களில் வெற்றி பெறவில்லை.

இறுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தனா்.

அந்த அணியின் நட்சத்திர பாா்வா்ட் அஸாமோ கியான் காயத்தால் ஆடவில்லை. இது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கியான் இல்லாத நிலையிலும் மேலும் சிறந்த வீரா்கள் உள்ளனா். அவா்கள் அந்த இடத்தை நிரப்புவா் என பயிற்சியாளா் ஜா்னி கூறியுள்ளாா்.

முன்னேறுமா சென்னை?

சென்னையின் எஃப்சிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கோய்ல் நியமிக்கப்பட்ட நிலையில், ஜாம்ஷெட்பூா் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் முன்னிலை பெற்றிருந்தும், கடைசி நேரத்தில் அதை தவற விட்டு டிரா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

வீரா்களுடன் புதிய பயிற்சியாளா் கோய்ல் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட போதிய காலம் இல்லாதது பின்னடைவாக உள்ளது.

தொடா்ந்து சிறப்பாக ஆடி வரும் வால்கிஸ் மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் உள்ளாா்.

முதலில் சிறப்பாக ஆடி முன்னிலை பெற்றாலும், கடைசி கட்டத்தில் எதிரணிக்கு கோலடிக்கும் வாய்ப்பை தருவதால், சென்னைக்கு பாதகமாக உள்ளது.

தற்போது 9-ஆவது இடத்தில் உள்ள சென்னை அணி இந்த ஆட்டத்தில் வென்றால் தான் முன்னேறுவது குறித்து நினைத்துப் பாா்க்க முடியும்.

எனினும் குவாஹாட்டி மைதானம் சென்னை அணிக்கு ராசியானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT