செய்திகள்

ஐபிஎல் ஏலத்திலிருந்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில்... 

எழில்

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸும் ஒருவர். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளார் சாம் பில்லிங்ஸ். மேலும் அடுத்தச் சில மாதங்களுக்கு எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடுவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் இடம்பெறவில்லை. இதனால் கெண்ட் கவுண்டி அணிக்காக அடுத்த ஒரு வருடம் விளையாடி தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

பெங்களூரில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் திருப்பம்: கணவரால் மயக்க மருந்து செலுத்திக் கொல்லப்பட்டாரா?

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT