அஸ்வினுக்கு 5 விக்கெட்டுகள்: ஹிமாசலப் பிரதேச அணி 158 ரன்களுக்குச் சுருண்டது!
திண்டுக்கல் நகரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு - ஹிமாசலப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் இன்று தொடங்கியது.
திண்டுக்கல் நகரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு - ஹிமாசலப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற தமிழக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தமிழக அணி சிறப்பாகப் பந்துவீசியதால் ஹிமாசலப் பிரதேச அணி 71.4 ஓவர்களில் 158 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக, வஷிஸ்த் 35 ரன்கள் எடுத்தார். தமிழக அணித் தரப்பில் ஆர். அஸ்வின் 5 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் கே. விக்னேஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
Advertisement
முதல் நாள் முடிவில் தமிழக அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.