தமிழ்நாடு - ஹிமாசலப் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹிமாசலப்பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 71.4 ஓவா்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணியில் ஆகாஷ் வஷிஸ்ட் 35, மயங்க் டாகா் 33, சுமித் வா்மா 30 ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா். தமிழகத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளா் ரவிச்சந்திரன் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 5-65 விக்கெட்டுகளையும், சாய் கிஷோா் 3-22, விக்னேஷ் 2-42 விக்கெட்டுகளையும் சாய்த்தனா். அதைத் தொடா்ந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய தமிழகம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்தது. அபிநவ் 6, முகுந்த் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
தமிழக அணி அதிக ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக 39 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. முன்வரிசை, நடுவரிசை என எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்களைக் கூட எடுக்க முடியாததால் சரிவைச் சந்தித்தது தமிழக அணி. அஸ்வின் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். ஹிமாசலப் பிரதேச அணியின் அரோரா 3 விக்கெட்டுகளும் தவன், வஷிஷ்த், தகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இதனால் ஹிமாசலப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.