ஒருநாள் தொடர்: தீபக் சஹார் விலகல், சைனி அணியில் சேர்ப்பு!
2-ம் ஒருநாள் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் கடைசி ஒருநாள் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார்.
டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் 2-ம் ஒருநாள் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் கடைசி ஒருநாள் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார். இதையடுத்து நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.