செய்திகள்

ரஞ்சி போட்டி: தமிழக அணிக்கு 217 ரன்கள் இலக்கு!

எழில்

திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற 217 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு - ஹிமாசலப் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹிமாசலப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 71.4 ஓவா்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணி அதிக ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக 39 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஹிமாசலப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் முன்னிலை பெற்றது.  தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஹிமாசல் அணி 2-ம் நாளின் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் ஹிமாசல் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழகத்தின் ஆர். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தமிழக அணி வெற்றி பெற 217 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT