முகப்பு
செய்திகள்

மார்ச் 29 அன்று தொடங்கும் ஐபிஎல்: முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ள மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் 2020 போட்டி, மார்ச் 29 அன்று தொடங்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 31 டிசம்பர், 2019 at 10:45 AM
பகிர்:

ஐபிஎல் 2020 போட்டி, மார்ச் 29 அன்று தொடங்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகி ஒருவர் இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

ஐபிஎல் 2020 போட்டி, மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதனால் ஆரம்பத்தில் வெளிநாட்டு வீரர்கள் சிலரால் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து டி20 போட்டி மார்ச் 29-ல் முடிவடைகிறது. இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் மார்ச் 31 அன்று முடிவடைகிறது. இதனால் ஏப்ரல் 1 அன்று ஐபிஎல் தொடங்கினால் எல்லா வீரர்களும் கலந்துகொள்ள முடியும். ஐபிஎல் நிர்வாகக் குழு என்ன முடிவெடுக்கிறது என்பது இனிமேல் தான் தெரிய வரும் என்று கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.