செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவை ஏற்கிறார் சேவாக்

DIN

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 புல்வாமாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
 இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சேவாக் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் தெரிவித்துள்ளார். அவர்களது இழப்பை நாம் ஈடு செய்ய முடியாது. நமது வீரர்களின் அனைத்து குழந்தைகளையும், ஜஜ்ஜாரில் உள்ள சேவாக் சர்வதேச பள்ளியில் சேர்த்து படிப்புச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என தனது சுட்டுரை (டுவிட்டரில் ) பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT