செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலி தொடர்ந்து முதலிடம், 3-ஆம் இடத்தில் புஜாரா

தினமணி

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். சக வீரர் சேதேஸ்வர் புஜாரா 3-ஆம் இடத்தில் உள்ளார்.
 அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசைகளை ஐசிசி வெளியிட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டது.
 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி 992 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 897 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், புஜாரா 881 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். கோலி, புஜாராவைத் தவிர மற்ற இந்திய வீரர்கள் எவரும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.
 அதே நேரத்தில் இலங்கை வீரர் குஸால் பெரைரா தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக ஆடியதால், 58 இடங்கள் முன்னேறி 40-ஆம் இடத்தில் உள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தில் இலங்கை வென்றது.
 பேட் கம்மின்ஸ் முதலிடம்: பந்துவீச்சாளர்களில் முதன்முறையாக ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் காகிúஸா ரபாடாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றார். கடந்த 2006-இல் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன், மூன்றாம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் காகிúஸா ரபாடா உள்ளனர்.
 ரவீந்திர ஜடேஜா: இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 5-ஆம் இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மே,இ.தீவுகளின் ஜேஸன் ஹோல்டர், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசனுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT