செய்திகள்

புல்வாமா தாக்குதல்: பிசிசிஐ சார்பில் ரூ.5 கோடி வழங்க சி.கே. கன்னா வலியுறுத்தல்

DIN

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குறைந்தது ரூ.5 கோடி வழங்க வேண்டும் என பிசிசிஐ சிஓஏவுக்கு தற்காலிக தலைவர் சி.கே. கன்னா வலியுறுத்தியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அதே நேரத்தில் பிசிசிஐ சார்பில் ரூ.5 கோடி நிதியுதவியை வழங்க சிஓஏ நிர்வாகிகள் வினோத் ராய், டயானா எடுல்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு மாநில சங்கங்கள், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக தர வேண்டும். ஆஸ்திரேலியா-இந்தியா இடையே நடைபெறும் தொடர் முதல் ஆட்டத்தில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும். மேலும் மார்ச் 23-இல் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி தொடக்க விழாவிலும் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கன்னா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT