செய்திகள்

பிளந்த ஷு....சரிந்த பங்குகள்: நைக் நிறுவனத்திற்கு நேர்ந்த பரிதாபம் (விடியோ) 

IANS

வாஷிங்டன்: ஆடுகளத்தில் கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் ஷு பிளந்து கொண்டதால் அதைத் தயாரித்த நைக் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் விலை சரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலக அளவில் விளையாட்டுப் பொருட்கள், உடைகள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பதில் நைக் ஒரு முன்னணி நிறுவனமாகும். அந்த நிறுவனமானது பல்வேறு விளையாட்டுகள் சார்ந்த வீரர்களைத் தனது பொருட்களுக்கு விளம்பரத் தூதுவர்களாகவும் பயன்படுத்தி வருகிறது. அத்துடன் பல அணிகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் ஒப்பந்தமும் பெற்றுள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட அணியான டியூக்கிற்கு ஷு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நைக் நிறுவனம்தான் வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஆடுகளத்தில் கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் ஷு பிளந்து கொண்டதால் அதைத் தயாரித்த நைக் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் விலை சரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதன்கிழமை மாலை ட்யூக் அணிக்கும் வடக்கு கரோலினா அணிக்கும் இடையேயான முக்கியயமான போட்டி ஒன்று நடந்தது. இதில் ஆட்டம் துவங்கிய ஒரு நிமிடத்தில் ட்யூக் அணியின் வீரர் ஜியோன் வில்லியம்சன் பந்துடன் விளையாடாத துவங்கிய உடனே அவரது காலில்  அணிந்திருந்த நைக் PG2.5 வகை ஷுவானது இரண்டாக பிளந்து கொண்டது. இதனால் அவர் ஆடுகளத்திலேயே தடுமாறி விழுந்தார். அத்துடன் அவருக்கு காயமும் உண்டானது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த டியூக் நிறுவனம் உடனடியாக இதுகுறித்து விசாரிப்பதாக அறிவித்தது. இருந்தபோதிலும் தகவல் வெளியான பின்னர் சந்தையில் நைக் நிறுவனத்தின் பங்கு விலைகள் சுமார் 1 சதவீதத்திக்ரு மேலாக சரிந்த து,.

கடந்த ஆண்டும் அந்நிறுவனம் இதே போல ஒரு சரிவைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT