முகப்பு
செய்திகள்

எனக்கு எதற்கு விளக்கம்?: கங்குலிக்கு ஆதரவாகப் பேசி நட்பை உயர்த்திப் பிடித்த சச்சின்!

சச்சினுடைய கருத்தோடு என்னுடைய கருத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அவருக்கு எதிராகவும் நான் பேசவில்லை...

Updated On : 25 பிப்ரவரி 2019, 4:34 pm IST
பகிர்:

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. புல்வாமா சம்பவம் எதிரொலியாக உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடக்கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சச்சின் கூறியதாவது: வரும் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் ஆடாமல், அதற்கு 2 புள்ளிகளை தருவதை வெறுக்கின்றேன். அத்தகைய முடிவு அவர்களுக்கு தான் சாதகமாக அமையும். போட்டியில் ஆடி, பாகிஸ்தானை வெல்ல வேண்டும் என காவஸ்கர் கூறியதை ஏற்கிறேன். இதுவரை உலகக் கோப்பை ஆட்டங்களில் நாம் வென்றுள்ளோம். அதே போல் இதிலும் பாகிஸ்தானை வெல்ல வேண்டும். எனினும் முதலில் நாடு தான் எனக்கு முக்கியம் என்றார் டெண்டுல்கர்.

பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று கூறிவருகிறார் கங்குலி. ஒருவிழாவில் சச்சினின் கருத்து குறித்து கங்குலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 2 புள்ளிகள் வேண்டும் என்கிறார். எனக்கு உலகக் கோப்பை வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

இதையடுத்து சச்சினுக்கு எதிராக கங்குலி பேசியதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து ட்விட்டரில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் கங்குலி:

எனக்கு உலகக் கோப்பை வேண்டும் என்கிற என்னுடைய கருத்தை சச்சினுக்கு எதிராகச் சொன்னதாகச் சில ஊடகங்கள் முயல்கின்றன. சச்சினுடைய கருத்தோடு என்னுடைய கருத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அவருக்கு எதிராகவும் நான் பேசவில்லை. அவர் எனக்கு எப்போதும், கடந்த 25 வருடங்களாக நல்ல நண்பராக உள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

கங்குலியின் இந்த விளக்கத்துக்கு சச்சின் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: எனக்கு நீங்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என எண்ணவில்லை. எல்லோருமே நம் நாட்டுக்கு சிறப்பானது வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனக் கூறியுள்ளார். கங்குலியை விட்டுக்கொடுக்காமல், நட்பை உயர்த்திப் பிடித்த சச்சினின் இந்த ட்வீட்டுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.