செய்திகள்

கோலியின் புதிய திட்டம் என்ன?: 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

பாண்டியா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை...

எழில்

சிட்னி டெஸ்டுக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்கவுள்ளது.

இந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். டெஸ்டில் அஸ்வின் விளையாடுவது குறித்து நாளை காலை முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் 13 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் தொடக்க வீரர் ராகுலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கர்நாடகத்தைச் சேர்ந்த ராகுலும் மயங்க் அகர்வாலும் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. விஹாரி தனது வழக்கமான 6-ம் நிலைக்குத் திரும்பவுள்ளார்.

பாண்டியா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை. இதுபோல இந்த டெஸ்ட் தேர்விலும் ஆச்சர்யங்களை வழங்கியுள்ளார் இந்திய கேப்டன் கோலி. இந்த 13 பேரில் அஸ்வினும் உமேஷ் யாதவும் அணியில் இடம்பெற மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், ஜடேஜா, பூம்ரா, ஷமி, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், அஸ்வின். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT