முகப்பு
செய்திகள்

ஆஸி. 300-க்கு ஆல்-அவுட்: இந்தியா ஃபாலோ ஆன் அழைப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

Updated On : 6 ஜனவரி, 2019 at 9:50 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:18 PM

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது. 

இப்போட்யில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, ரிஷப் பந்த் 159 ரன்களை குவித்தனர். 

தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்தினார். இந்திய அணி ஆஸி.யை விட 322 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

போட்டியின் இடையே மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தில் அவ்வப்போது தடை ஏற்பட்டு வருகிறது.

கடந்த 1947-48-இல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தற்போது அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.