செய்திகள்

தேசிய சீனியர் ஹாக்கி தமிழகம் கோல்மழை

DIN


தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழகம் 13-1 என்ற கோல் கணக்கில் அஸ்ஸாம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐசிஎப் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே தமிழகம் கோல் மழை பொழிந்தது. அஸ்ஸாம் அணியால் தமிழகத்தின் அபார ஆட்டத்துக்கு ஈடுதரமுடியவில்லை. தமிழகத் தரப்பில் ராயர் 3, தாமு, செல்வராஜ், மணிகண்டன், ஜோஷ்வா தலா 2கோல்களும், நவீன்குமார், அஜய் தலா 1 கோலும் அடித்தனர். அஸ்ஸாம் தரப்பில் சுபம் சிங் ஓரே கோலை அடித்தார்.
ஞாயிற்றுக்கிழமை புதுவை அணியுடன் மோதுகிறது தமிழகம்.
எழும்பூரில் நடைபெற்ற ஆட்டங்களில் மகாராஷ்டிரம் 5-3 என தெலுங்கானாவையும், மணிப்பூர் 19-0 என அந்தமானையும், சத்தீஸ்கர் 3-2 என ஆந்திரத்தையும், எப்சிஐ 8-1 என ஹிமாச்சலையும், தில்லி 4-1 என கேரளத்தையும் வென்றன. ம.பி., மிசோரம் அணிகள் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT