செய்திகள்

'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

Raghavendran

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது.

ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றிபெற்றது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 104 ரன்கள் குவித்தார். 

அபாரமாக ஆடிய தோனி, 2 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 55 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். 

தினேஷ் கார்த்திக் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உடனிருந்தார். ரோஹித் 43, தவன் 32, ராயுடு 24 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலைப் பெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT