செய்திகள்

தோனி இனி ஒருமுனையில் ஆட்டத்தைக் கட்டுப்படுத்துவார்: சச்சின் நம்பிக்கை

ஒருமுனையில் இருந்து ஆட்டத்தின் போக்கை தோனி இனி கட்டுப்படுத்துவார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 

Raghavendran

ஒருமுனையில் இருந்து ஆட்டத்தின் போக்கை தோனி இனி கட்டுப்படுத்துவார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

முதல் ஒருநாள் போட்டியில் தோனி சிறிது இறுக்கத்துடன் காணப்பட்டார். நினைத்த இடத்தில் அவரால் பந்துகளை அடிக்க முடியவில்லை. இது கிரிக்கெட்டில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் இயல்பான ஒன்று தான். ஆனால், 2-ஆவது ஒருநாள் போட்டியில் மாற்றுச் சிந்தனையுடன் களமிறங்கினார். முதல் பந்தில் இருந்தே அவர் வேறு வீரராக வெளிப்பட்டார்.

தற்போது வயதாகியுள்ள தோனி, நடுவரிசையில் களமிறங்கி நங்கூரமாக ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றுள்ளார். மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதிலும் எப்போதும் போல் வல்லவராகத் திகழ்கிறார். 

களமிறங்கியவுடன் சில பந்துகளை தடுப்பாட்டம் ஆடி, விக்கெட்டின் போக்கையும், பந்துவீச்சாளர்களின் திட்டங்களையும் கணித்துக்கொள்வார். அதைத்தான் இந்தப் போட்டியிலும் சிறப்பாக செய்தார். எனவே இனிவரும் காலங்களில் ஒருமுனையில் இருந்து ஆட்டத்தின் போக்கை தோனி கட்டுப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர், தனது 100 எம்பி ஆப்-பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT