செய்திகள்

மலேசிய மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் சாய்னா; ஸ்ரீகாந்த் வெளியேற்றம் 

DIN


மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஓகுஹாராவை வீழ்த்திய சாய்னா நேவால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலிறுதிச் சுற்றுகள் நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் ஜப்பானின் நஸோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை சாய்னா நேவால் 21-18 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது செட்டில் இருவரும் சரிசமமாக விளையாடினர். இதனால், 2-ஆவது செட் 4-2, 8-5, 11-9, 14-12, 18-14, 19-19 என விறுப்பாக சென்றது. எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா நேவால் கடைசி கட்டத்தில் 23-21 என்ற புள்ளிக் கணக்கில் 2-ஆவது செட்டையும் கைப்பற்றி 2-0 என வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

ஆடவர் பிரிவு காலிறுதிச் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் கொரிய வீரர் சான் வான் ஹோவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 23-21 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், அடுத்த 2 செட்டில் எழுச்சி கண்ட கொரிய வீரர் 21-16, 21-17 என்ற கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தினார். இதன்மூலம், 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT