முகப்பு
செய்திகள்

இந்திய அணிக்கு பாரம்பரிய வரவேற்பளித்த மாவோரி பழங்குடியினரின் விடியோ

2-ஆவது மற்றும் 3-ஆவது ஒருநாள் ஆட்டங்கள் மௌன்ட் மௌங்கானுய் எனுமிடத்தில் அமைந்துள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றன. 

Updated On : 26 ஜனவரி, 2019 at 8:10 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:28 PM

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. 

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது மற்றும் 3-ஆவது ஒருநாள் ஆட்டங்கள் மௌன்ட் மௌங்கானுய் எனுமிடத்தில் அமைந்துள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றன. 

இந்நிலையில், இங்கு வருகை தந்த இந்திய அணிக்கு நியூஸிலாந்தின் மாவோரி பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி ஹாகா நடனத்துடன் கூடிய வரவேற்பு அளித்தனர். மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வின் விடியோ பதிவை பிசிசிஐ வெளியிட்டது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.