செய்திகள்

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாய்னா சாம்பியன் 

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

DIN

ஜகார்தா:  இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவை 18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் இந்தியாவின் சாய்னா நெவால்.

அதேபோல சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனையும், சர்வதேச தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ளவருமான கரோலினா மரீன், சீன வீராங்கனை சென் யூஃபெய் 21-17, 11-21, 21-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கரோலினாவும், சாய்னாவும் மோதினர்.

பரபரப்பாகத் துவங்கிய ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே ஸ்பெயினின் கரோலினா மரீன் காலில் காயமடைந்து மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரால் தொடந்து பங்கேற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டதால், இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT