செய்திகள்

ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு: சஞ்சய் பாங்கர் சூசகம்

வங்கதேசத்துடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற வாய்ப்புள்ளதாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். 

Raghavendran

வங்கதேசத்துடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற வாய்ப்புள்ளதாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒரு ஆட்டத்தில் குல்தீப், சஹல் பந்துவீச்சு சரியாக அமையவில்லை என்று அவர்களை குற்றம்சாட்டுவது தவறு. இனிவரும் போட்டிகளில் அவர்களின் பங்கு முக்கியமானது. அணியின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு. இங்கிலாந்துடனான போட்டியில் நாங்கள் சில பாடங்களைக் கற்றோம். குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன் இல்லாதது பெரும் குறை தான். 

அதை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்துள்ளார். நடுவரிசையில் அவருடையே பேட்டிங் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே 4-ஆவது வீரராக பண்ட் தொடர்வார். வங்கதேசத்துடனான போட்டியின் போது அதே மைதானத்தில் தான் களமிறங்க உள்ளோம். எனவே அணித் தேர்வில் சில மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக இங்கிலாந்துடன் கடைசி கட்டத்தில் ரன்களை அள்ளி வழங்கிவிட்டோம். எனவே கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் விளையாட வாய்ப்புள்ளது.

அதிலும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர் 8-ஆவது வரிசையில் ஆடுவது 5 மற்றும் 6 ஆகிய இடங்களிலும் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுதந்திரத்தை அளிக்கும். மேலும் கீழ்நிலை வரிசையை பலப்படுத்த ரவீந்திர ஜடேஜாவும் களமிறங்க வாய்ப்புள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

சென்னையில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

ரோசா பூப்போல... வர்ஷா!

ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் பால்குட ஊா்வலம்

பைக் திருட்டு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT