செய்திகள்

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் இயன் சேப்பல்!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் சேப்பல், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்...

எழில்

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் சேப்பல், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

75 வயதான இயன் சேப்பல், 75 டெஸ்டுகளிலும் 16 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1971 முதல் 1975 வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இயன் சேப்பல். ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெயரையும் எடுத்தவர்.

இந்நிலையில், தோல் புற்றுநோயால் இயன் சேப்பல் பாதிக்கப்பட்டுள்ளார். தோல்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் புறஊதா கதிர்கள். நாள் முழுக்க வெயிலில் நின்று கிரிக்கெட் ஆடியதால் இந்தப் பாதிப்புக்கு அவர் ஆளாகியுள்ளார். இதையடுத்து அவருக்குக் கடந்த 5 வாரங்களாகக் கதிரியக்கம் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கழுத்து, தோள்பட்டையிலிருந்து தோல் புற்றுநோய்த்தன்மை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான நைன் தொலைக்காட்சியின் வர்ணையாளர் குழுவில் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் சேப்பல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT