செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகள்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

Raghavendran

ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கௌன்டி மைதானத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு போட்டிகளும், கயானாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி 3-ஆவது போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், முதல் இரு டி20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. கெய்ரன் பொல்லார்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் மே.இ.தீவுகள் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

காயத்தால் உலகக் கோப்பை அணியில் இருந்து விலகிய ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசலும் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் உடல்தகுதியில் தேர்வுபெற்றால் மட்டுமே அணியில் தொடர முடியும்.

14 பேர் கொண்ட மே.இ.தீவுகள் அணியின் விவரம் பின்வருமாறு:

கார்லஸ் பிரத்வயிட் (கேப்டன்), ஜான் கேம்பல், இவன் லீவிஸ், ஷிம்ரோன் ஹெத்மேய்ர், நிகோலஸ் பூரான், கெய்ரன் பொல்லார்ட், ரோவ்மேன் பவல், கீமோ பால், சுனில் நரேன், ஷெல்டன் காட்ரல், ஒஷேனோ தாமஸ், அந்தோனி ப்ராம்பெல், ஆண்ட்ரே ரசல், காரி பீய்ரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT