செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா அதிரடித் தொடக்கம்

DIN


மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்புச் சாம்பியனான அமெரிக்கா தனது முதல் ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை தவிடுபொடியாக்கியது. 
இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் அதிகபட்ச கோல்கள் வித்தியாசத்திலான வெற்றியை அமெரிக்கா பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டு ஜெர்மனி 11-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டீனாவை வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது. 
பிரான்ஸின் ரெய்ம்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் சார்பில் நட்சத்திர வீராங்கனை அலெக்ஸ் மோர்கன் 5, ரோஸ் லாவேல், சமந்தா மெவிஸ் தலா 2, லின்ட்சே ஹோரான், மீகன் ராஃபினோ, மலோரி பியூக், கேர்லி லாய்ட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 
இதில் அலெக்ஸ் மோர்கன், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை கோலடித்த அமெரிக்க வீராங்கனை மிஷெல் அகெர்ஸின் சாதனையை நிகர் செய்துள்ளார். தொடர் வெற்றியின் மூலம் எஃப் பிரிவில் அமெரிக்கா முதலிடம் பிடிக்கும் பட்சத்தில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை காலிறுதி ஆட்டத்தில் எதிர்கொள்ளும். 
ஸ்வீடன் வெற்றி: இதனிடையே, எஃப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடன் 2-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வென்றது. ஸ்வீடன் தரப்பில் அஸ்லானி மற்றும் ஜனோகி தலா ஒரு கோல் அடித்தனர். ஈ பிரிவில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட நெதர்லாந்து, 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணிக்காக ரார்டு கோல் அடித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT