செய்திகள்

மழை பாதிப்பு: அனைத்து ஆட்டங்களுக்கும் மாற்று வாய்ப்பு தர இயலாது

DIN


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்கள் அனைத்தையும், மாற்று நாள்களில் நடத்துவதற்கான வாய்ப்பு வழங்க இயலாது என்று ஐசிசி அறிவித்துள்ளது. 
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மழை காரணமாக இதுவரை 3 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை மோதிய ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் கைவிடப்பட்டன. தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, வேறு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
மழையால் பாதிக்கப்படும் அனைத்து ஆட்டங்களையும், மாற்று நாளில் நடத்துவதென்பது இயலாத காரியமாகும். அவ்வாறு செய்வது உலகக் கோப்பை போட்டி நடைபெறும் காலத்தை அதிகமாக நீட்டிக்கும். இங்கிலாந்தில் தற்போது நிலவும் வானிலை இந்தப் பருவத்துடன் தொடர்பில்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. 
மாற்று நாள்களில் ஆட்டம் நடத்துவதற்கு ஆடுகளத்தை தயார்படுத்துதல், அணிகளை தயார்படுத்துதல், அவற்றுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி, மைதானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள், போட்டியை நடத்தும் ஊழியர்கள், ஒளிபரப்பு சார்ந்த ஏற்பாடுகள், பார்வையாளர்கள் என பல்வேறு காரணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. 
மாற்று நாளில் ஆட்டம் நடைபெறும்போது மழை பொழியாது என்பதற்கான உத்தரவாதமும் கிடையாது. நாக் அவுட் பிரிவில் மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் பட்சத்தில் மாற்று நாளில் அதை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT