செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த துவக்க ஜோடி: ரோஹித், ராகுல் புது சாதனை!

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் துவக்க ஜோடி புது சாதனைப் படைத்துள்ளது. 

Raghavendran

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் துவக்க ஜோடி புது சாதனைப் படைத்துள்ளது. ஷிகர் தவன் காயமடைந்ததை தொடர்ந்து நடுவரிசையில் விளையாடி வந்த ராகுல் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார்.

இந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் ராகுல் 57 ரன்கள் சேர்த்தார். ரோஹித் ஷர்மா 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசினார். ரோஹித், ராகுல் ஜோடி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி தந்தது.

முதலில் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாமல் தடுமாறினர். ஒரு கட்டத்தில் ரோஹித் ஷர்மா ரன்-அவுட்டாகும் நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானின் மோசமான ஃபீல்டிங் காரணமாக இந்த நிலை தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 136 ரன்களை குவித்தனர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற புது சாதனையையும் படைத்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு இந்திய துவக்க ஜோடி இதுவரை குவித்த ரன்களின் விவரம் பின்வருமாறு: 

  • சித்து, டெண்டுல்கர் - 90 ரன்கள்
  • சேவாக், டெண்டுல்கர் - 53 ரன்கள்
  • சேவாக், டெண்டுல்கர் - 48 ரன்கள் 
  • ரமேஷ், டெண்டுல்கர் - 37 ரன்கள் 
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT